விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
இண்டூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 28-ந் ேததி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நாகர்கூடல் வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது தெரியவந்தது.
இண்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். தூக்கில் பிணமாக தொங்கியது செல்வம் என்பது தெரியவந்தது. பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.