பரமத்தி அருகே பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்தி அருகே பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-06-27 17:29 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரப்பன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 36). பால் வியாபாரி. இவரது மனைவி ரேவதி (26). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சீனிவாசன் மாவுரெட்டி புதுவளவு பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்