காவேரிப்பட்டணம்:
காேவரிப்பட்டணம் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வரமடம் அடுத்த ராசன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 30). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனைவி கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சங்கர் தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
விசாரணை
அப்போது அவர் வர மறுத்தார். இதில் மன உளைச்சல் அடைந்த சங்கர், சவுளூர் பாரகோவில் பக்கமாக ஏரிக்கரையோரத்தில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.