தஞ்சை மங்களபுரம் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மனைவி மதுமிதா (வயது 35). இவர் வல்லம் மூப்பத்தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மதுமிதா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீயில் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதுமிதா இறந்தார். இது குறித்து மதுமிதாவின் சகோதரர் சத்யகுமார் ( 40) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.