பாலக்கோடு:
மகேந்திரமங்கலத்தில் அதிகளவில் மாத்திரை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறு
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுணசேகரன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளாள். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று காலையும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
விசாரணை
இதனால் விரக்தியடைந்த திவ்யா வீட்டில் இருந்த மாத்திரைகள் அதிகளவில் தின்று மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் திவ்யாவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் திவ்யா இறந்தார். இதுதொடர்பாக மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.