ரூ.1½ லட்சம் வழிப்பறி புகாரில் திடீர் திருப்பம் - நண்பருடன் சேர்ந்து வாலிபர் நாடகமாடியது அம்பலம்

சென்னை அயனவரத்தில் வழிப்பறி புகாரில் நண்பருடன் சேர்ந்து வாலிபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

Update: 2023-07-20 08:36 GMT

அயனாவரம், 

சென்னை அயனாவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் மகேந்தர் (வயது 33). இவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள மொத்த வியாபார துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் போரூரில் உள்ள துணிக்கடையில் ரூ.1½ லட்சத்தை வசூல் செய்துவிட்டு நியூ ஆவடி ரோடு ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி தன்னிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை பறித்து சென்றுவிட்டதாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் மகேந்தர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், புகார் அளித்த மகேந்தரே தனது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த சுக்காராம் (25) என்பவருடன் ேசர்ந்து மர்மநபர்கள் பணத்தை பறித்து சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. அயனாவரம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்