சென்னையில் திடீர் கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்... வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2022-08-25 18:18 GMT



சென்னை,

பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியும், சிலர் ஆங்காங்கே இருந்த இடங்களிலும் நின்று விட்டும் சென்றனர்.

இதேபோல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

அம்பத்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வில்லிவாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், புதூர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட இடங்களிலும், கனமழை கொட்டித் தீர்த்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்