நகராட்சி குடியிருப்பில் திடீர் தீ
நகராட்சி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள நகராட்சி குடியிருப்பில் நேற்று மாலை திடீரென அங்கு குடியிருக்கும் முருகேசன் என்பவர் வீட்டில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த பெரியவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.