இரும்பு பட்டறையில் திடீர் தீ விபத்து
இரும்பு பட்டறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாலத்துறை அருகே செக்குமேடு செட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரபாண்டியன் (வயது 45). இவர் பாலத்துறை அருகே இரும்பு பட்டறை (லேத் ஒர்க் ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டறையில் இருந்த ஆயிலில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பட்டறைக்கு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.