பூக்கள் விலை திடீர் வீழ்ச்சி; குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை

பூக்கள் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.;

Update:2022-10-26 00:13 IST

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ேசர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், மலர் சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.1,500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.300-க்கும், ரோஜா ரூ.300-க்கும், முல்லை ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1,500-க்கும், செவ்வந்தி ரூ.320-க்கும் விற்பனையானது.

நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், பச்சை முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது. கோவில் மற்றும் திருமண நிகழ்வுகள் இல்லாததால் பூக்களின் விலை‌ வீழ்ச்சி அடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்