பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீர் சாவு

கந்திகுப்பம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீரென இறந்தார்.

Update: 2022-08-21 17:49 GMT

பர்கூர்

கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது 16). அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வாந்தி மயக்கமாக காணப்பட்ட மாணவனை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்