கர்ப்பிணி பெண் திடீர் சாவு

கடையநல்லூர் அருகே, கர்ப்பிணி பெண் திடீரென இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-02-16 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி முகிலா (வயது 19). இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பாஸ்கரன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது முகிலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது பெற்றோர் முகிலாவை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முகிலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முகிலாவின் தந்தை மூக்காண்டி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிேரத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். முகிலாவுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆகி உள்ளதால் தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்