சுடலை மாடசாமி கோவில் கொடை விழா

மேலநத்தம் சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-02-03 19:17 GMT

மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தில் உள்ள பேச்சியம்மன், சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வீதி உலா நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஹோமம், கொடி அழைப்பு கொடை விழா நடந்தது.

நேற்று அதிகாலை சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 11 மணிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், மதியம் 12 மணிக்கு மதியக்கொடை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலையில் பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு படையல் தீபாராதனை மற்றும் சாமக்கொடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்