ஆட்டோ ரிக்‌ஷா வாங்க மானியம்

பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ ரிக்‌ஷா வாங்க மானியம் வழங்கப்படுவதாக கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

Update: 2022-12-08 18:45 GMT

தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நல வாரியங்களில் ஒன்றான தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் (ஆட்டோ) மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுகுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்‌ஷா வாகனம் வாங்குவதை ஊக்கு விக்கவும், அவர்களுக்கான சுய தொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ ரிக்‌ஷா வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

மானிய விலையில் ஆட்டோ ரிக்‌ஷா வாங்குவதற்கான விண்ணப்பத்தை கடலூர், செம்மண்டலம், தீபன்நகர், வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நலவாரியத்தில் பதிவு

ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனர்கள் இது வரை ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு பெறவில்லை எனில், உடனடியாக நல வாரியத்தில் பதிவு பெற்று ஆட்டோ ரிக்‌ஷா வாங்க வழங்கப்படும் ரூ.1 லட்சம் மானிய தொகையை பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்