திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் படிக்கும் மாணவ-மாணவிகள்

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் படிக்கும் மாணவ-மாணவிகள்

Update: 2023-02-08 18:45 GMT

போதிய இடம் வசதி இ்ல்லாததால் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை உள்ளது. எனவே கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரத்தடியில் படிக்கும் மாணவ-மாணவிகள்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மொத்தம் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 50 ஆண்டு பழைய வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதனால் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் மரத்தடியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்களின் பெற்றோர் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் கட்டிடம் கட்டப்படாததால் மாணவ, மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலையில் உள்ளனர்.

போதிய இடவசதி

மேலும் மழைக்காலங்களில் போதிய இடவசதி இல்லாமல் பள்ளி வராண்டாக்களில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனால் அதிக மாணவர்கள் பள்ளியை விட்டு பாதியில் நின்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்