சந்திரயான்-3 விண்கலம் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள்

சந்திரயான்-3 விண்கலம் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடியுடன் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2023-08-24 19:05 GMT

காரைக்குடி

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் 40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மாலை நிலவில் தரை இறங்கியது. நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும், உலகில் நிலவில் தடம் பதித்த 4-வது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடினர்.

நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் தொடர்ந்து அரை மணி நேரம் மாணவ, மாணவிகள் கைத்தட்டி ஆரவாரம் எழுப்பி இந்திய தேசிய கொடியுடன் வந்து நன்றியை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷ் இஸ்ரோவின் சாதனையும், சந்திரயான்-3 விண்கலம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்