கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-10-16 17:20 GMT

கல்வி உதவித்தொகை பெற...

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் http://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login சென்று, ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில், தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

இணையதளம் மூலம்...

கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு நாளை (புதன்கிழமை) முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்