2 வாலிபர்கள் உல்லாசம் அனுபவித்ததால் மாணவி தற்கொலை

மரக்காணம் அருகே தந்தைக்கு சாராயம் கொடுத்து 2 வாலிபர்கள் உல்லாசம் அனுபவித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல வெளியாகி உள்ளது

Update: 2022-09-23 18:45 GMT

மரக்காணம்

மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தவர் 14 வயது மாணவி. இவரது தாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தை மற்றும் தம்பியுடன் குடிசை வீட்டில் மாணவி வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் சிக்கியது

மாணவியின் சாவுக்கான காரணங்கள் குறித்து ஏதாவது தடயங்கள் சிக்குமா? என்று போலீசார் மாணவியின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ஒரு செல்போன் கிடைத்தது. தந்தை வாங்கிக் கொடுக்காத நிலையில், மாணவிக்கு செல்போன் கிடைத்தது எப்படி? என்று விசாரணையில் போலீசார் இறங்கினர்.

அந்த செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை வைத்து விசாரித்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்களுடையது என்பது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட போலீசார் 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, மாணவியுடன் உல்லாசமாக இருந்த திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

தந்தையின் குடிப்பழக்கம்

அதாவது 2 வாலிபர்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். மாணவிக்கு தாய் இல்லாததால் அவரது தந்தையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவியின் தந்தைக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அந்த வாலிபர்கள், மாணவியை சந்திக்க வரும்போதெல்லாம் சாராய பாக்கெட்டுகள் வாங்கி வந்து அவருக்கு கொடுப்பார்கள். அதை குடித்துவிட்டு போதையில் அவர் மயங்கிவிடுவார்.

இதையடுத்து அந்த வாலிபர்கள் மாணவியிடம் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்துள்ளனர். கடந்த 2 மாதமாக இது அரங்கேறி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு அவர்கள் செல்போன் வாங்கி கொடுத்து, அதன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் அந்த வாலிபர்கள் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தனர்.

அவமானத்தில் தற்கொலை

மாணவியின் வீட்டுக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதை அறிந்த கிராம மக்கள் அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மாணவியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருந்ததா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை இழந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் வழிதவறி தகாத உறவு தேடிச் சென்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்