பொங்கலூர்
மத்திய அரசு சின்ன வெங்காயத்திற்கு விதித்துள்ள 40% வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிப்பை கொண்டு வந்தது இந்த வரி விதிப்பால் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கொள்முதல் செய்து ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாததால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது மேலும் ட்ரு 45 லிருந்து 60 வரை விட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது விலை குறைவும் ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ரத்து செய்வதன் பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தை தனியாக பிரித்து அதற்கான தனி எண் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொங்கலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தின் போது வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 40% வரியை ரத்து செய்ய வேண்டும் பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தை தனியாக பிரித்து ஏற்றுமதிக்கான சின்ன வெங்காயத்திற்கு தனி எண் உருவாக்கித் தர வேண்டும் பிரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்சனை ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை திருப்பூர் ஈரோடு திண்டுக்கல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் தென்காசி ஆகிய பகுதியில் மட்டும் விளையக்கூடியது சின்ன வெங்காயம் வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது மத்திய அரசு ஒவ்வொரு முறையும் வெங்காயத்திற்கு ஏற்றுமதிக்கான தடையை ஏற்படுத்தும் போது சின்ன வெங்காய ஏற்றுமதியும் பாதிக்கப்படுகிறது எனவே இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சின்ன வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கு தனி எண் உருவாக்கி தரவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்