உத்தனப்பள்ளியில் 166-வது நாட்களாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் ... ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையால் வாபஸ்

Update: 2023-06-19 19:45 GMT

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 166-வது நாளாக நடந்தது. இதையடுத்து ஓய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். ஜி.எம்.ஆர். நிலங்களை மட்டுமே எடுக்க வேண்டும். நெருப்புகுட்டையில் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலங்களை எடுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. வாக்குறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். அவர்களுக்கு பழரசம் கொடுத்து எம்.எல்.ஏ., போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, சிப்காட் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க.முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கட்டேஷ், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்