3-வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

3-வது நாளாக தாய்-மகள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-13 18:45 GMT

தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கனகம், அவரது மகள் வேலுமதி, இவருடைய மகன் சிறுவன் மூவரசு ஆகியோரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு நகை, வெள்ளி பொருட்கள், சேலைகளை கொள்ளையடித்து சென்றனர். அதில், கனகம், வேலுமதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் மூவரசன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநில முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை தொடர்ந்து தேவகோட்டையிலேயே தங்கியிருந்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட தாய், மகள் உடல்களை அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறுத்து வருகின்றனர். 3-வது நாளான நேற்றும் அவர்களது உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மேலும், இது சம்பந்தமாக 4 நாட்டார்கள் தரப்பில் இன்று கண்ணங்கோட்டையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர்தான் உடல்களை பெற்று கொள்வார்களா என தெரியவரும்? இந்த கூட்டம் தொடர்பாக கண்ணங்கோட்டையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்