தர்மபுரியில்மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Update: 2023-08-28 19:45 GMT

தர்மபுரி 

தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாமிக்கண்ணு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் சம்மேளன மாநில துணைத்தலைவர் அறிவழகன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கரோலின்ராஜ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில் ஏராளமான மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் வடிவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்