ஓமலூர் அருகே தாராபுரத்தில்சாலையில் கற்களை வைத்து பொதுமக்கள் போராட்டம்போலீசார் பேச்சுவார்த்தை

Update: 2023-08-07 20:47 GMT

ஓமலூர்

ஓமலூர் அடுத்த தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஓமலூர்- சின்ன திருப்பதி சாலையின் இருபுறமும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சின்ன திருப்பதி செல்லும் சாலையில் மேற்கே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் சாக்கடை கால்வாயை தனிநபர் மூடிவிட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சிலர் சாக்கடை கால்வாயை வெட்டி கழிவுநீரை சாலையில் விட்டதால் கழிவுநீர் எதிர்புறம் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சாலையில் கல்லை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஊராட்சி நிர்வாகத்தில் பேசி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், சாக்கடை கால்வாயை எடுத்து விடவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலையில் வைத்திருந்த கற்களை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்