தேன்கனிக்கோட்டை அருகேதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம்
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னங்கூர் காய்கறி மார்க்கெட் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 19-வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி ஒருவர் இறந்தது போல் இருக்கையில் மாலை போட்டு அமர வைக்கப்பட்டு சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினர். நிறுவனர் ஈசன் முருகசாமி கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேசினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி, கவுரவ தலைவர் முனிராஜூலு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் தீபா, மாவட்ட பொருளாளர் முனிராஜ், இளைஞர் அணி விஸ்வநாத், மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.