பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-12-08 14:39 GMT

பாம்பன், 

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி இருப்பதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் கூண்டு அருகே இருக்கும் அபாய எச்சரிக்கை விளக்குகளில், 2 சிவப்பு விளக்குகளும் எரிய விடப்பட்டு இருந்தன.

புயல் சின்னம் உருவாகி உள்ள போதிலும் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான நிலையிலேயே கடல் காட்சி அளித்தது. பகல் முழுவதும் வெயில் இல்லாமல் மழை பெய்வது போன்று மேகமூட்டமாக வானம் காணப்பட்டது.

ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்