சட்ட விழிப்புணர்வு குறித்த தெருமுனை நாடகம்

சட்ட விழிப்புணர்வு குறித்த தெருமுனை நாடகம் நடத்தப்பட்டது.

Update: 2022-05-25 17:22 GMT

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பல்கீஸ் வழிகாட்டுதலின்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் குறித்த தெருமுனை நாடகம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த தெருமுனை நாடகத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா தலைமை தாங்கினார். அதில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சட்ட பாதுகாப்பு மற்றும் சட்ட தீர்வு குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட தன்னார்வலர்கள், பணியாளர்கள், செவாலிய சிவாஜி நாடக சபா குழுவினர் ஆகியோர் தெருமுனை நாடகத்தில் நடித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்