ெபாதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்கள்
ெபாதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்கள்
திருச்சிற்றம்பலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை ்பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டு் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சம்
திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, துறவிக்காடு கடைவீதிகள் மற்றும் கிராம பகுதிகளில் அண்மைக்காலமாக தெருநாய்கள் பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள், கால்நடைகள் ஆகியவற்றை அவ்வப்போது கடித்து குதறுவது அன்றாட வழக்கமான நிகழ்வாக தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். தெருநாய்களின் தொல்லையால் இருசக்கர வாகன விபத்துகளும் பெருகி வருகின்றன.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
எனவே இனியும் தாமதிக்காமல் திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, துறவிக்காடு கடைவீதிகள் மற்றும் கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.