எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்

ஆத்தூர், உடன்குடி பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-06-28 18:45 GMT

ஆறுமுகநேரி:

திருச்செந்தூர் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் ஆத்தூர் முஸ்லிம் தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார்.

தொகுதி செயலாளர் அப்துல் வரவேற்றார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் காதர், செயலாளர் நிசார் உட்பட கட்சி நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் ஜூலை 20-ந் தேதி வரை கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பை தீவிரப்படுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூசா நைனா நன்றி கூறினார்.

இதேபோன்று, உடன்குடி சந்தையடித்தெரு சந்திப்பு, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். நகர், சுல்தான்புரம் ஆகிய பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்றப்பட்டு, மரக்கன்றுகள், கல்வி உபகரணங்கள், நீர்மோர் வழங்கப்பட்டது. திருச்செந்தூர் தொகுதி செயலர் சாகுல்ஹமீது, நகர துணைசெயலர் சாகுல், பைசல்ரஹ்மான், ஹயாத், ஷாஜஹான், யாஷிக், ஷேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்திட்டம், கொள்கைகள், சாதனைகள் குறித்து மாவட்ட அமைப்பு பொதுச்செயலர் அப்துல்காதர் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்