பேட்டை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
பேட்டை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி 18-வது வார்டு சீனிவாசநகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தின் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே இங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் நெல்லை பேட்டை, சீனிவாசநகர், குடிசைமாற்று வாரியம், ரெயில்நகர், சாஸ்திரிநகர், விஸ்வநாதநகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளுக்கு 10-ந் தேதி (சனிக்கிழமை), 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. இந்த பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.