புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்

புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-09-11 18:28 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஒருசில பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அடக்க விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து சென்றாலும் மீண்டும் விற்பனை செய்கின்றனர். புகையிலை பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்