சீர்காழியில் இருந்து பட்டவர்த்தி வழியாக கும்பகோணம் செல்லும் வாகனங்கள் நிறுத்தம்
144 தடை உத்தரவு காரணமாக சீர்காழியில் இருந்து பட்டவர்த்தி வழியாக கும்பகோணம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சீர்காழி:
144 தடை உத்தரவு காரணமாக சீர்காழியில் இருந்து பட்டவர்த்தி வழியாக கும்பகோணம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
144 தடை உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் அருகே பட்டவர்த்தி கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அப்பகுதியில், 500-க்கும் மேற்பட்ட போலீார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதி வழியாக வாகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீர்காழியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, பட்டவர்த்தி, பந்தநல்லூர் வழியாக கும்பகோணம் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சீர்காழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இரும்பு தடுப்புகள் அமைப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் கடைவீதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதையை மூடி உள்ளனர். இதனால் வைத்தீஸ்வரன்கோவில், பட்டவர்த்தி, மணல்மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் வசதி இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்களை போலீசார் தீவிர விசாரணை செய்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.