வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கப்பட்டது.
ேகாவையில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை அரக்கோணத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் மணவூர் - செஞ்சி பணப்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது ரெயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் சி-5 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. நல்ல வேளையாக பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த கல்வீச்சு குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.