பங்கு வர்த்தக முதலீட்டாளர் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் பங்கு வர்த்தக முதலீட்டாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக கடிதமும் சிக்கியது;

Update:2022-12-06 00:31 IST

ஸ்ரீரங்கத்தில் பங்கு வர்த்தக முதலீட்டாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக கடிதமும் சிக்கியது

பங்கு முதலீட்டாளர்

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55). பங்கு வர்த்தக முதலீட்டாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவக்குமாரின் சகோதரர் சுரேஷ் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும், அந்த வீட்டில் சோதனை நடத்தியதில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்