விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை

விருதுநகரில் குடிநீர் வினிேயாக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மாதவன் தெரிவித்தார்.

Update: 2022-10-22 19:41 GMT

விருதுநகரில் குடிநீர் வினிேயாக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மாதவன் தெரிவித்தார்.

முதல் முறை

நூற்றாண்டு கண்ட விருதுநகர் நகராட்சியில் முதல் முறையாக தி.மு.க. நகராட்சி தலைவர் ஆர்.மாதவன் பொறுப்பேற்றுள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தனலட்சுமி பொறுப்பேற்றுள்ளார். விருதுநகர் 30-வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதவன் நகர் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் குறித்து கூறியதாவது:-

விருதுநகரில் நான் 30-வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுமே எனது வார்டுகள் தான் என்ற எண்ணத்தில் நகராட்சி பகுதி மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறேன். விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் ஆனைக்குட்டம் அணை பகுதி மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலையில் வாரம் ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டம்

தற்போது வினியோக நேரத்தை 2½ மணி நேரமாக அதிகரித்துள்ளோம். கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு குடிநீர் வினியோக இடைவெளி நாட்களைகுறைக்க வாய்ப்பு ஏற்படும். ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்தும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தினை முழுமையாக முடிப்பதற்கு முன்பே குடிநீர் வடிகால் வாரியத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டனர். இருந்த போதிலும் வீட்டு இணைப்புகள் கொடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் நிதியை பெற்று பாதாள சாக்கடை திட்டப் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி பூங்கா

குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு பராமரிப்பு தற்போது புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை பராமரிப்பு மற்றும் குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீர் எடுத்தல், தடுப்பு ஆகியவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பூங்கா கடந்த ஆட்சி காலத்தில் விருதுநகர் நகராட்சி பூங்கா ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அவை முறையாக செய்யப்படாத நிலையில் தற்போது தன்னார்வலர்கள் மூலம் பூங்கா முறையாக பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

துப்புரவு பணி

விருதுநகரில் தூய்மை பணி முறையாக நடைபெற்று வருகிறது. நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்க அரசு ஒப்புதல் தராத நிலையில் ஒப்பந்த பணியாளர்களை வைத்து துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்தத்தில் விருதுநகர் மக்கள் தங்கள் தேவை மற்றும் கோரிக்கைகளை குறித்து எந்நேரமும் என்னைசந்தித்து பேசலாம். நானும் நகரில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வார்டு மக்களின் குறையை கேட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்