வீடுகள் தோறும் படி விளையாட்டு பூஜை

வீடுகள் தோறும் படி விளையாட்டு பூஜை நடைபெற்றது.

Update: 2023-04-13 19:04 GMT

புன்னம் பகுதியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புன்னம், பசுபதிபாளையம், குளத்தூர், அய்யனூர், பழமாபுரம், ஆலாம்பாளையம், பெரியரங்கபாளையம், வேலாயுதம்பாளையம், தலையீத்துப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராம மக்கள் பாத்தியப்பட்டவர்கள். பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி கடந்த 26-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் மேள தாளங்கள் முழங்க அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று படி விளையாட்டு பூஜை நடைபெற்றது. இதேபோல 18 பட்டி கிராமங்களில் உள்ள ஒவ்வொரு பக்தர் வீடுகளுக்கும் கொண்டு சென்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்