சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் பணம் திருடு போனது.

Update: 2023-06-23 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே தாகம் தீர்த்தாபுரம் கிராமம், மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68). விவசாயி, இவா் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்க்க சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மர்ம மனிதர்கள் இவரது வீட்டு கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூபாய் 75 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது பற்றி குழந்தைவேல் கீழ்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்