வீட்டில் கட்டியிருந்த ஆடு திருட்டு
வீட்டில் கட்டியிருந்த ஆடு திருடப்பட்டுள்ளது.
கரூர் காதப்பாறை அருகே உள்ள பஞ்சமாதேவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் முன்பு கட்டியிருந்தார். சம்பவத்தன்று வந்து பார்த்தபோது, அந்த ஆட்டை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.