சுப்பிரமணிய சிவாவுக்கு சிலை
வத்தலக்குண்டு பூங்காவில், சுப்பிரமணிய சிவாவுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் பேசும்போது, வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில் வத்தலக்குண்டுவில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய செயல் அலுவலர் தன்ராஜ், சிலை வைப்பதற்கு பல்வேறு அடிப்படை விதிமுறைகள் உள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.