புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி

கழுகுமலை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-25 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை புனித லூர்து அன்னை ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த 22-ந் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 6 மணியளவில் ஆலய பங்குத்தந்தை அண்டோ திருப்பலி நிறைவேற்றி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தவக்கால சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் குறித்து 14 ஸ்தலங்களும் பின்பற்றி கிறிஸ்தவர்கள் உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஆலய பங்குத்தந்தை அண்டோ சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்