மாநில அளவிலான யோகா போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை

மாநில அளவிலான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகாசனப்போட்டி, திருப்பூர் ராக்கியாபாளையம் அருகில் உள்ள ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் நடைபெற்றது.

Update: 2023-06-26 16:41 GMT


சாவித்திரி அம்மாள் நினைவு முதலாமாண்டு மாநில அளவிலான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகாசனப்போட்டி, திருப்பூர் ராக்கியாபாளையம் அருகில் உள்ள ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியில் காரைக்குடி கல்லூர் மலர் குரூப் கம்பெனிஸ் மேலாண்மை இயக்குனர் பி.எல்.படிக்காசு, நல்லூர் சரக உதவி போலீஸ் கமிஷனர் நந்தினி, 58-வது வார்டு கவுன்சிலர் காந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன் தலைமை தாங்கினார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட முத்தணம்பாளையம் பாசன தலைவர் மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தொழிலதிபர்கள் சந்தீப்குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், நிரஞ்சன்-ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜெனரல், அட்வான்ஸ், ஸ்பெஷல், சாம்பியன் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு பசிபிக் யோகா அசோசியேசன் செயலாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டிகளை நடத்தினர். பரிசளிப்பு நிகழ்ச்சியில் டெக்கான் மதிவாணன், அபிராமி கலர் வெங்கடேஷ்,வாஸ்து நிபுணர் மோகனகிருஷ்ணா மற்றும் வர்ம சிகிச்சை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்