விருதுநகர் நோபிள்மெட்ரிக் பள்ளியில் உலக பாரம்பரிய சோட்டாகான் கராத்தே சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 13 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் கராத்தே பள்ளிகளில் பயிற்சி பெறுவோர் கலந்து கொண்டனர். போட்டிகளை நோபிள் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், முதல்வர் டாக்டர் வெர்ஜின்இனிகோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் உலக கராத்தே மாஸ்டர் சிகான் சத்ரஜித் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது. போட்டிகள் ஆரஞ்சு, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ண பெல்ட்டுகளுக்காக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.