மாநில அளவிலான குத்துச்சண்டை
கரூரில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 500 வீரர்கள் பங்கேற்றனர்.;
குத்துச்சண்டை போட்டி
தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தலைவர் பொன்பாஸ்கர் ஒப்புதலுடன் கரூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கொங்கு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் சேலம், விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, பாலக்காடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோப்பை-சான்றிதழ்
போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், எலைட், யூத் என 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமை நடுவர்களாக சென்னையை சேர்ந்த மோகன், விருதுநகரை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரபாகரன், முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.