தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
இதையடுத்து 10 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு:-
10 பேர் தேர்வு
அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை அபரஞ்சி, தேக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நாகராஜன், காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சேவியர் பீட்டர் பால்ராஜ், டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஞானசுந்தரி, ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜாத்தி, சுக்குவாடன்பட்டி பாபு நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் ராஜா, லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மருதமாலதி, உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ராஜேஸ்வரி ஆகிய 10 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது அறிவிக்கப்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.