சாலையோரம் நின்றலாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் படுகாயம்
போடி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்ேடா மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
போடி பஸ் நிலையத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சில்லமரத்துப்பட்டிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். போடி-தேவாரம் சாலையில் ஆட்டோ சென்றது. அப்போது சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (48), ஹேமலதா (28), ராஜேஸ்வரி (37) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆட்டோவில் வந்த ராஜா என்பவர் போடி நகர் போலீசில் புகாா் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.