சந்தோஷப்படாதீங்க முதல்வரே... ! அ.தி.மு.கவைப் பற்றி பேசும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை- சி.வி.சண்முகம் கோபம்!
அ.தி.மு.க. என்ற இயக்கம் என்றைக்கும் தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் சுயலாபத்திற்காக திருத்தப்பட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சென்னை
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் தற்போது இல்லை. இரண்டு பதவிகளும் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அவைகள் காலாவதி ஆகிவிட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க. பொருளாளர் மட்டுமே.தொண்டர்கள்களுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க என்ற இயக்கம் என்றைக்கும் தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் சுயலாபத்திற்காக திருத்தப்பட்டது.
அவைத்தலைவர் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்டலாம்
எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது. மேலும், அ.தி.மு.க.வில் நடப்பதை கண்டு தி.மு.க சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுக என்ன ஜனநாயக முறைப்படி நடக்கிற கட்சியா? அதிமுகவைப் பற்றி பேசும் தகுதி தி.மு.க.வுக்கும் ஸ்டாலினுக்கும் இல்லை."ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக தலைமைப் பதவிக்கு வரும் இயக்கம் திமுக.
தி.மு.க.வில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை" என ஸ்டாலின், அ.தி.மு.க.அ.தி.மு.க. என்ற இயக்கம் என்றைக்கும் தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் சுயலாபத்திற்காக திருத்தப்பட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
பொதுக்குழுவை சூசகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.