அருப்புக்கோட்டை பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
அருப்புக்கோட்டை பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பஸ்நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தற்காலிக பஸ் நிலையம்
அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதற்குப்பதிலாக பஸ் நிலையம் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
சிறிய மழை பெய்தால் கூட தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் ேதங்கி விடுகிறது. மேலும் பஸ் நிலையம் முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் அதில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் பயணிகள் கீேழ விழுந்து விடுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குண்டும், குழியுமான சாலையால் பஸ் நிலையத்தில் பஸ்களை இயக்க டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேங்கிநிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனி மழைக்காலம் என்பதால் தற்காலிக பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.