வரவேற்பு மையத்தில் ஊழியரைநியமிக்க வேண்டும்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வரவேற்பு மையத்தில் ஊழியரைநியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-26 18:27 GMT


திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் 6 மாடியில் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள். எந்த அலுவலகம் என்று தெரிவதற்காக தரை தளத்தில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தும், அந்த வரவேற்பு மையத்தில் யாரும் இருப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வரவேற்பு மையத்தில் ஊழியரை நியமித்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்