ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா கொடியேற்றம்; இன்று தேர்பவனி நடக்கிறது

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இன்று தேர்பவனி நடக்கிறது

Update: 2023-06-19 18:45 GMT

மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கொடியேற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, பங்குதந்தை கிறிஸ்துராஜ், ஏற்காடு கப்புசின்சபை செல்வநாயகம், தியாகதுருகம் அருட்தந்தை சூசைராஜா,ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்று, பெருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை ஆண்டு பெருவிழா கூட்டு திருப்பலியும், ஆடம்பர தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிறிஸ்துராஜ், ரோமாபுரி வேதியர் தேவராஜ் மற்றும் அருட்சகோதரிகள், வேதியர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்