புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

குத்தாலம் அருகே புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி திரளானோர் பங்கேற்றனர்

Update: 2022-06-07 18:30 GMT

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா, கோமல் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன்கோமல் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மே மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் மறையுரை, அந்தோணியார் மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடைபெற்றன. நேற்று முன்தினம் மின்விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து மாந்தை பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. நேற்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. முன்னதாக அன்னதானம் நடந்தது. இதில், கோமல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோமல் கிராம தலைவர்கள், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்