கோபியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோபியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடத்தூர்
தலைமை செயலகத்தில் இருந்து துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்களை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்வதை கண்டித்து கோபி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.